tamilnadu

img

இணைய தடையால் வேலையிழந்து தவிக்கும் பத்திரிகையாளர்கள்

காஷ்மீரில் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதால் கட்டிட வேலை செய்யும் அவல நிலைக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை மோடி அரசு ரத்து செய்தது.  காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்முகாஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.  இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றளவும்  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களின் போராட்டங்களிக்கு பயந்து மோடி அரசு  காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ந்து  இண்டர்நெட் சேவையை துண்டித்துள்ளது. இதனால் உள்ளூர் செய்தியாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருவதாக பிபிசி செய்தி நிறுவனம் ஆய்வு கட்டுரை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வேலையும் இன்றி கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். குடும்ப வறுமையைப் போக்க பணியை இழந்த பத்திரிகையாளர்கள் கிடைத்த வேலைக்குச் சென்று வருகின்றனர். பத்திரிகையாளர்கள் கட்டிட வேலையிலும், பால் பண்ணை வேலைக்கும் செல்ல அவலம் நிலவுகிறது. பலரும் பொருளாதார சூழலை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இன்னும் சில பத்திரிகையாளர்கள் சேகரித்த செய்திகளை இணைய சேவையின்றி நிறுவனத்திற்கு கொண்டு சேர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
 

;